பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 83

அந்த அம்மாள் தந்த பால் தண்ணீர் அதிகம் கலந்ததாக இருந்தது. இதை அவர் அந்த அம்மாளிடம் சொன்னார்.

அவள் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு, “நாளை முதல் உங்களுக்குத் தர நம்மகிட்டே பால் இல்லை. கள்ளிச்சொட்டு மாதிரி பால் கறந்து கொடுக்கிறவங்க கிட்டேயே வாங்கிக்கிடுங்க!’ என்று சொல்லி விட்டாள்.

அப்புறம் பிள்ளையின் மனைவி அந்த அம்மாளின் நாடியைப் பிடித்துத் தாங்காதகுறையாக கெஞ்சி வேண்டி, தொடர்ந்து பால் ஊற்றும்படி ஏற்பாடு செய்தாள்.

இப்படிப்பட்ட மனித சுபாவங்கள் பாலுப்பிள்ளைக்குப் புதியனவாகத் தோன்றின. கிராம மக்களிடம் ‘முன்னொரு காலத்தில் அன்பையும் பிரியத்தையும், பரோபகாரத்தையும் மனித நேயத்தையுமே கண்டு அனுபவித்திருந்தார் அவர். உறவுமுறை இல்லாதவர்கள் கூட சொந்தக்காரர்கள் போல் வாஞ்சையுடன் பழகினார்கள்; உதவி புரிந்தார்கள். காய்கறிகள், விளை பொருள்களை அண்டை அயல் வீடு களுக்குத் தாராளமாக வழங்கினார்கள். தன்னிறைவு: பெற்றிருந்தது கிராமம்... எதையும் காசாக்க வேண்டும், எப்படியும் பணம் பண்ணவேண்டும் என்ற நகர மனோபாவம் பஸ் நாகரிகத்துடன் எல்லா கிராமங்களிலும் புகுந்து விட்டதாக பாலுப்பிள்ளை கருதினார்.

அவ்வூரில் ஒரு கடை. பலசரக்குக் கடை. டவுனில் மூன்றாம் தரச் சரக்குகள்ை வாங்கி வந்து, டவுன் கடைகளில் முதல் தரச் சரக்குகளின் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார் கடைக்காரர். அவர் கடையிலும் வியாபாரம் நடந்து கொண்டுதான் இருந்தது.

“இங்கே சாமான் வாங்குவதற்கு மனம் இல்லாதவர்கள் டவுன் பஸ்ஸிலே போயி டவுனிலேயே வாங்கிக் கிடட்டுமே!