பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 87

‘நகரத்தின் வசதி நிறைந்த அறைக்குள். மின்விசிறியின் கீழே அமர்ந்து, உடம்பிலே பிடியாது எழுதுகிறவர்கள் இப் படித்தான் எழுதுவார்கள். இப்படி உயர்வாகப் பேசுகிறவர்கள் இன்றைய கிராமங்களை எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எண்ணினார் பிள்ளை.

இன்றைய இந்தியாவின் ஆத்மா அதன் கிராமங்களிலும் இல்லை; நகரங்களிலும் இல்லை; அது திரிசங்கு நிலையிலே எங்கோ ஊசலாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் மனம் பேசியது.