பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அதே நேரத்தில்...

(B.

நாகரிகப் பெருநகரம் ஒளி அலங்காரங்களால் பகட்டிக் கொண்டிருந்த வேளை.

தெருக்களில் ஜனநடமாட்டமும் வாகனங்களின் இயக்கமும் அதிகம்தான்.

எவ்வளவோ ஜனங்கள் எத்தனை தினுசு மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்னைகள், குழப். பங்கள், தாகங்கள், தவிப்புகள். ஏக்கங்கள், ஆசைகள் - உணர்வுச் சுழிப்புகள்: நாகரிகம் மினுக்கி மின்னும் நவநாகரிக தடபுடல் ஒட்டல் ஒன்றின், பலவித ஒளிகளும் பூத்துக் குலுங்கும் ரூஃப் கார் டனில் கலகலப்பும் களிப்பும் கவலையற்ற தன்மையும் நிலவின.

மூலை மேஜை ஒன்றைச் சுற்றி ஐந்துபேர். ஒவ்வொரு வருக்கும் தனித்தனிப் பிரச்னைகள், கவலைகள், எண்ண ஒட்டங்கள் இருந்த போதிலும், அந்த நேரத்தில் உல்லாசி களாகவும் உற்சாகிகளாகவும் காட்சியளித்தனர். ஜாலி பிரதர்கள் அவர்கள் பேச்சு இதை விளம்பரப்படுத்திக்