பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 புண்ணியம் ஆம் பாவம்போம்:

இருக்கிற உற்சாகத்தையும் கெடுத்துப் போடுவான். சரியான கில் ஜாய் அவனை கூப்பிடவே கூடாது. .

சோமு, தனியாக எதையும் பார்க்காமல், ஆனாலும் விசாலப் பார்வையால் அனைத்தையும் விழுங்கியவாறு இருந்தான். அவன் கபாவமே ஒரு மாதிரி. எதையும் ‘வீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. ‘பார்க்கப்போனால் எதிலும் ஒண்னுமேயில்லை. அர்த்தமற்றது. இன்றையப் பொழுதின் இந்த வேளை இப்படிக் கழிந்ததாக்கும். சந்தோஷம். இனி எப்போ எது என்னவாறு நடக்கும் என்று நான் ஏன் மனசை அலட்டிக் கொள்ள வேணும்? நடக்கிறது நடக்கிறபடி நடக்கட்டுமே!’ என்று அவன் அடிக்கடி நண்பர் களை போரடித்திருக்கிறான். இப்போதும் அதுபோல் ஞான மொழி ஏதேனும் உதிர்க்கலாமா என்று ஒரு எண்ணம் அவன் உள்ளத்தில் திரண்டது. அதை அமுக்கிவிட்டு, ப்சா என்று அலட்சிய ஒலிக்குறி சிந்திச் சும்மாயிருந்தான்.

நாராயணன், தன் மனைவி அன்று க்ேகிரமே வீடு வந்து சேரும்படி சொல்லி அனுப்பியிருந்ததை இப்போது திடீரென்று நினைத்துக் கொண்டான். நோயால் கஷ்டப்படும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காட்டவேண்டும் என்று சொல்லியிருந்தாள். ஏதோ ஒரு டானிக் வாங்கிவரும் படியும் சொன்னாள். போகிற பாதையில் மருந்துக் கடை ஏதாவது திறந்திருக்காமலா போகும் உள்ல்லாக் கடையும் அடைச் சிருந்தால், ட்வெண்டி ஃபோர் அவர்ஸ் சர்வீஸ் - த்ரூ அவுட்டே அண்ட் நைட் என்று வெளிச்சம் போட்டுக் கொண்டு, வியாபாரம் செய்கிற தடியன் ஷாப்புக்குப் போகவேண்டியதுதான். விலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உம்: போறான்’ என்று எண்ணிக்கொண்டான். உதட்டளவில் என்னென்னவோ பேச்சுகள் உதிர்ந்தன. நேரம் ஓடியது. .