பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 * புண்ணியம் ஆம் பாவம்போம்!

மோட்டாரின் வேக ஓட்டத்தை வியக்கும் சக்தி சோமுவுக்கு இருக்கவில்லை. அவன் செத்தே போனான். இந்த நிமிஷத்தில் இன்னும் தொண்ணுாற்றொன்பது பேர் உயிரை விட்டிருப்பார்கள் என்று எண்ணும் சக்தி அவனுக்கு இருந்திருந்தால் - அவன் கடைசிச் சிந்தனை நெளிந்து மறைந்திருக்கலாம்.

அவனோடு சேர்ந்து உல்லாசமாக விருந்து உண்டவர்கள் இன்னும் அவரவர் இருப்பிடம் போய் சேரவே இல்லை.

அந்த நேரத்தில் -

நாராயணன் ஒரு மருத்துக் கடையில் நின்று கொண்டிருந் தான். நல்ல வேளை டானிக் வாங்கியாச்சு!” என்ற திருப்தி அவனுக்கு. - -

சிதம்பரம், லலிதாவைத் தேடிப்போய், அவள் வீட்டில் இல்லை; சில ஃபிரண்ட்ஸோடு சினிமாவுக்குப் போயிருக் கிறாள் என்று கேள்விப்பட்டு, ஏமாற்றத்தோடு ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தான். ‘யார் கூடப் போயிருப்பா? ஃபிரண்ட்ஸ் என்றால் சிநேகிதிகளா? சிநேகிதன்களா? என்ற பிரச்னையை வைத்து அவன் மனம் ஆராய்ந்து கொண்டி ருந்தது.

சந்திரனும் சாமிநாதனும் சிகரெட் பிடித்தவாறே ஹாயாக நடந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ரசனைக்கு அருமை யான விருந்துகள் கிடைத்துக் கொண்டதானிருந்தன. “சினிமாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, படம் பார்த்து விட்டு வெளியே வருகிறவங்களைப் பார்ப்பதிலே தான் அதிக இனிமை இருக்கு. நான் அவ்வளவாய் படம் பார்ப்பது கிடையாது. ஆனால், படம் பார்த்துவிட்டு வெளி யே வாறவங்களை ரசிக்கும் வாய்ப்பை நான் அடிக் கடி ஏற்படுத்திக் கொள்வது உண்டு என்று சந்திரன் சொன்னான்.