பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னுரை

உலகம் உருப்பட உள்ள ஒரே வழி பொதுமை அறம்தான்். அதனைச் செயற்படுத்த முனைவதே பொதுவுடைமைக் கொள்கை. உலகத்தின் ஒரு பங்கான தமிழக மும் இந்தியாவும் இதனைப் போற் றிச் செயல்படுத்துவதே அறிவு. டைமை யாகும்.

எநத ஒரு புதிய வாழ்க்கையும் சமுதாய அமைப்பும், பண்பாடும் நம்மிலிருந்துதான்் தொடங்க வேண்டும். ந ம் ைம நாமே பொதுமை அறத்தை நோக்கிப் புதுப்பித்துக் கொள்ளும் போது தான்் நம் உள்ளத்திலும், நாட்டி லும், உலகத்திலும் புத்துயிர் விளையும்; புரட்சி ஏற்படும்.

சமூகம் வேரோடு புத்துயிர் பெறல்வேண்டும். அதற்கு நம்முள் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவேண் டும். உண்மையும் அன்பும் சிக்க லைத் தீர்க்கும் உந்தாற்றல்கள். அந்த ஆற்றலின் கருவியில் ஒன்று பாட்டு. பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்க முடியும் என்று காட்டிய பாவேந்தர்