பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

108


தொழில்துறையில் வெற்றி கண்ட ஓர் ஆண், அதே திறமையுடைய பெண்ணின் ஆளுமையை ஒத்துக் கொள்வதில்லை. இவன் அமெரிக்காவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் ஆதிக்க மரபு ஓடிக் கொண்டிருக்கிறது. அவன் எல்லாச் சடங்குகளையும் விட்டாலும் இந்த மரபு மாயாமல் இருக்க ‘உயிர்த்தண்ணி’ வார்ப்பவர்கள் சமயபிடங்களே.

“பத்மாவதித் தாயாரின் தாலி வீழ்ந்ததாம்; போய் தாலியைப் பத்திரமாகப் புதிப்பித்துக் கட்டிக் கொள்ளுங்கள்” என்று எவரேனும் ஒரு வதந்‘தீ’யைப் பரப்பினால் இந்தியப் பெண் டிம்பக்டுவில் இருந்தாலும் தாலி காக்க ஒடுவது ஏன்?

பெண் ‘சம உரிமை’ என்ற ஒன்றை நினைக்கவும் ஆகாது; மலையில் வளர்ந்தாலும் உரலில் மசிய வேண்டும். ஒருவனின் தாலியைக் காலா காலத்தில் சுமந்து அவனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் ஊழியம் செய்து, குலம் விளங்க ஆண் மக்களைப் பெற்றுத் தந்து அவன் மரிக்கு முன் இவள் பூவும்பொட்டுமாக வானுலகமேகி அவனை வரவேற்றுப் பணிபுரிய வேண்டும்.

இந்த நியதிகளில் ஒன்று முரணானாலும் அவள் வாழ்க்கை பதர். கன்னியாக இருக்கலாகாது; வாழை மரத்தை வரித்து, தாலியணிந்து அதை வெட்டி, தாலியெடுத்து தரிசு மண்ணாகக் காலம் கழிக்க வேண்டும். பெற்ற மக்களை நடுத்தெருவில் விட்டாலும் அவன் தந்தை, ஆதிக்கம் செலுத்துவான்.

குமரப்பருவத்தில் துரோகமிழைத்து தாலியை உருவிக் கொண்டு குரூரங்கள் இழைத்தாலும் அவன் கணவன், அவனுக்கு உட்பட வேண்டியது தருமம். இவளுக்கு வரும் ஓய்வூதியமோ எதுவோ பெற, மகன் கள்ளக் கையெழுத்துப்-