பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

புதியதோர் உலகு செய்வோம்


போட்டு வஞ்சித்தாலும் அவனை அரவணைக்க வேண்டும். அவன் மகன்!

“புருசன் அடிச்சுக் கொல்லுறான்மா” என்று காவல் துறைப் பெண் அலுவலரிடம் குற்றம் சொல்ல வந்தால், “புருசன்தானேம்மா அடிச்சான்; இது புகாரா?” என்று அலுத்துக் கொள்வார் அவர். அவரே புருசனிடம் ‘மரியாதை’ பெற்று வந்திருக்கலாம்.

குடிசையில் இருக்கும் குமரியில் இருந்து கோமகள் வரையிலும் பெண்ணுக்குரிய பருவத்தில் திருமணம் நிகழவில்லை என்றால், அவளுக்கு உணர்வுரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் பாதுகாப்பு இல்லை.

பெண் சிசுக் கொலைக்குப் பேர் போன ஓர் ஊரில் ஒரு பெண்மணி, பொட்டபுள்ள பத்துவயசில சமஞ்சு நிக்கும். பொண்ணு சமஞ்சா ஆணுக்குத்தான்னு பாடி வச்சிருக்காங்களே! எவனேனும் தொட்டுத்தொலச்சா என்ன செய்ய? அது அப்புறம் நஞ்சரைச்சிக் குடிக்கும். இப்பவே அது கண்ணு மூக்கக் காட்டு முன்ன, ஒரு நெல்லயோ துளி பாலயோ ஊத்திக் கதய முடிச்சிடனும்’ என்று கூறினாள்.

இந்தத் தொட்டுக்குலைக்கும் சமாசாரம் ஆண்களுக்கு விளையாட்டு. தொலைக்காட்சித் தொடர்களின் வண்ண விசித்திரமாய் தந்திரங்களில் இது களிப்பூட்டும் அம்சம். பெண்...?

அந்த நாசகாரன், சாதி, மதம், நிபந்தனைகள் பூதங்களாய் நிற்கும். உட்பட்டாலும் அந்தப் பெண் நெடுநாள் வாழாது.

அடுத்து, அன்றாடம் உணவுக்கு நெருப்பு மூட்டும் பெண், அந்திமத்தில் தாய்க்கோ தந்தைக்கோ எரியூட்டத்-