பக்கம்:புதிய கோணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் கண்ட இன்பம் 93

இத் தமிழ் நாட்டார் காதலை மன அடிப் படையிலேயே அதிகம் கண்டனர் என்பதை மற்றொரு வகையாலும் அறியலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாக அகவாழ்க்கையைப் பிரித்துக் கூறினார்கள். எனினும் கூட்டத்தைக் குறிக்கும் குறிஞ்சித் திணை பற்றிய பாடல்களைக் காட்டிலும் பிரிவைக் குறிக்கும் பாலைத் திணைப் பாடல்கள் பல மடங்கு அதிகமாக இருக்கின்றன. மனிதனுடைய வாழ்வு முழுவதையும் குறிக்கொண்டு பேசும் காமத்துப் பாலில் உள்ள மொத்த அதிகாரங்கள் 25. அதில் பன்னிரண்டு அதிகாரங்கள் பிரிவுபற்றி (பாலை) எழுந்தன என்றால் பாலையின் சிறப்பை வெளியிட வேறு சான்றும் வேண்டுமோ? இதன் காரணம் யாது என்பதைச் சற்று நின்று ஆய வேண்டும்.

பிரிவில், ஒருவரை ஒருவர் காணுகிற வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. உடனிருந்து வாழும் பொழுது ஒருவரையொருவர் நினைப்பது தவிர மனத்தில் பிற எண்ணங்களுக்கும் இடம் இருக்கும். ஆனால், பிரிவு ஒன்றில் தான் எண்ணம் முழுவதும் பிரிந்தவர்கள் பற்றியே நிகழும். அன்றியும் ஒருவரிடத்து மற்றவர் எத்துணை அன்பு கொண்டு உள்ளார் என்பதை அளவிடவும், அறிந்துக் கொள்ளவும் கூடப் பிரிவுதான் பயன்படுகிறது. இந்த அடிப்படையில்தான் பாலையாகிய பிரிவு அகத்திணை இலக்கியத்தில் அதிக இடம் பெறுகின்றது. குறளும் இதற்கு விலக்கன்று என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/101&oldid=659803" இலிருந்து மீள்விக்கப்பட்டது