பக்கம்:புதிய கோணம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புதிய கோணம்

காமத்துப்பாலில் பாலைக்கு ஒதுக்கின அதிகாரங்கள் மூலம் காணலாம்.

விட்டுப் பிரிந்திருக்கும் தலைவன் ஒருவன் இத்துணை நேரமும் தன்னைப் பற்றியே நினைந்து கொண்டிருப்பான் என எண்ணுகிறாள் ஒரு தலைவி. ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கே இயல்பான சந்தேகமும் வந்துவிடுகிறது. ஒருவேளை தன்னைப் பற்றி நினைக்க வேண்டும் என்று கருதி உடனேயே வேறு அலுவல் காரணமாக அந்நினைப்பை ஒதுக்கி விட்டான் போலும் என்று கவல்கிறாள். அம்மன நிலையை இதோ பேசுகிறார் வள்ளுவர்.

“நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்” (குறள்-1203)

(எனக்குத் தும்மல் வருவதுபோல வந்து அடங்கி விட்டது. எனவே தலைவன் நினைப்பது போன்று நினையான் கொல்)

இதுகாறுங் கூறியவற்றால் பிற ஆசிரியர்கள் இன்பத்தைக் கண்ட விதமும் வள்ளுவர் இன்பத்தைக் கண்டவிதமும் வேறு வேறு என்பதும், மனித மனத்தின் ஆழத்தை நன்குணர்ந்த வள்ளுவனார் கூறிய இன்பத்துப்பால் உலக முழுவதற்கும் எக் காலத்தும் பொருந்தும் என்பதும் நன்கு விளங்கும்.

இ.இ.இ.இ.இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/102&oldid=659804" இலிருந்து மீள்விக்கப்பட்டது