பக்கம்:புதிய கோணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கவிதைப் பண்பு

கவிதை என்று கூறியவுடன் நம்மில் பலருக்குப் பல வகையான எண்ணங்கள் தோன்றக்கூடும். அடிகள் நீண்ட பாடலையும் அவை குறைவாக அமைந்துள்ள பாடலையும் அவரவர் நினைத்தல் ஐடும். கவிதை என்ற பெயரைக் கேட்டவுடன் அது முன்னரே அறியப்பட்ட ஒன்று என்பது மாத்திரம் தெரியுமேயன்றி, இதுதான் கவிதை என்று கவிதையின் இலக்கணம் கூறப் பலருக்கும் இயலாது தான். சிலவகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்து இனிது விளக்குவது என்றும், சுருங்கக் கூறி விளங்கவைப்பது என்றும் ஓரளவாகக் கவிதையின் இயல்புகளைக் கூறலாமேயன்றித் திட்ட வட்டமாக இலக்கணம் வகுத்தல் கடினமானதுதான்.

கவிதை என்றால் என்ன என்பது பற்றிச் சிறிது ஆராய்வோம். மனிதன் பெற்றுள்ள பல்வேறு சிறப்புக்களுள் ஒன்று அவன் பேசும் மொழி. ஏனைய விலங்கினங்களிலிருந்து அவன் பிரித்து எண்ணப்படுவதற்கு உற்ற கருவியாக உள்ளது மொழியாகும். விலங்கினங்களுங்கூடத் தம்முடைய கருத்தை அறிவிக்க ஓசை உண்டாக்குகின்றன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/103&oldid=659805" இலிருந்து மீள்விக்கப்பட்டது