பக்கம்:புதிய கோணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 97

யனவுமான இலக்கணங்களை உடையனவே மனிதன் பேசும் சொற்கள் என்று அறிய முடிகிறது.

இத்தகைய சொற்களுள்ளும் சிறந்த சொற் களையே கவிதை எடுத்து ஆளுகிறது. சொற்களுள் சிறந்த சொற்கள் என ஒரு பகுதி உண்டா என்றால், உள்ளது என்றே கூற வேண்டும். ஒவ்வொரு சொல்லும் குறிப்பிட்ட ஒரு பொருளைக்குறிப்பதோடு நிற்பதில்லை. கூறுவோன் மனக் கருத்தை வெளியிட வருகின்ற சொல் இரண்டு வகைகளால் அத் தொழிலைச் செய்கிறது. இவ்வியல்பு சொல்லுக்கு இயற்கையாக அமைந்துள்ளது. சொல் பொருளை நேரடியாகக் குறிப்பது முதல் வகை. தனக்குரிய பொருளால் பொருளை உணர்த்தும் இவ்வாற்றலைப் பொருளாற்றல் (Semantic Meaning) என்பர். சொற்கள் பொருளால் பொருளைக் குறிப்பது மட்டும் அன்றித் தம் ஒசையாலும் பொருளைக் குறிக்கின்றன. இதனை நம்மில் பலர் அறியாவிடினும் செயல் அளவில் இத்தன்மையைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. ஒருவனை இழித்துப் பேசவேண்டிய நிலையில், “நீ மிகவும் நல்லவன்!” என்று கூடக் கூறுவதைக் கேட்கிறோம். இந்நிலையில் நல்லவன் என்ற சொல் நன்மை என்று தனக்குரிய பொருளை விட்டுவிட்டுத் தீயவன் என்ற முற்றும் மாறான பொருளை எவ்வாறு குறித்தது? சொல்பவனுடைய குறிப்பு அதுதானாகலின் இப்பொருளைக் குறித்தது. தனது குறிப்புத் தீயவன் என்று இருக்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/105&oldid=659807" இலிருந்து மீள்விக்கப்பட்டது