பக்கம்:புதிய கோணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புதிய கோணம்

சொல்பவன் வேறு பொருளுடைய இந்தச் சொல்லை அறியாமல் பயன்படுத்தினானா? அறிந்து தான் செய்தான் என்றால், இச்சொல் தனது ஒசையால் சொல்வோன் குறிப்பை நாம் அறியுமாறு செய்தது. இவ்வாறு சொற்கள் ஒசையால் பொருள் உணர்த்துவதை ஒசையாற்றல் (Phonetic Meaning) என்று மொழிநூலார் கூறுவர்.

இவ்வாறு சொல்லைப் பயன்படுத்துபவன் நேரடியாக நம்மிடம் பேசினால் அவன் குறிப்பை அவனுடைய ஒசையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனால் எழுத்தில் எழுதிவிட்டால் எவ்வாறு ஒசையைக் கண்டு பிடிப்பது? அவ்வாறு கண்டாலும் ஒசையால் பொருள் மாறுபட்ட நிலையை எவ்வாறு உணர்வது? உரைநடையில் இந்த வேறுபாட்டை உணர்வது கடினமாயினும் கவிதையில் உணர்வது எளிது. காரணம் கவிதை ஓசையைப் பெரிதும் நம்பி வாழ்வதாகலின், கவிஞன் ஒரு சொல்லைப் பயன்படுத்தும் பொழுது அதனுடைய மேற்கூறிய இருவகை ஆற்றலையும் நன்கு அறிந்தே பயன்படுத்துகிறான். கவிதையைப் படித்து அனுபவிக்கும் பொழுது வாய்விட்டுப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் கவிதையின் சிறப்பை நன்கு அறிய இயலும் சில சொற்களைத் தனியே கூறும்பொழுது எவ்விதமான சிறப்பும் தெரியாது. ஆனால் அந்தச் சொற்களே முன்னும் பின்னும் சில சொற்களுடன் கூடிவரும்பொழுது, தமக்கென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/106&oldid=659808" இலிருந்து மீள்விக்கப்பட்டது