பக்கம்:புதிய கோணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 99

இயற்கையாக உள்ள ஒலியை விட்டுப் புதிய ஒலிகளைப் பெற்றுவருவது யாவரும் அறிந்த ஒன்றே. ‘தா’ என்ற எழுத்து வல்லினமாயினும் தாளம் என்ற சொல்லிலும் செந்தாமரை என்ற சொல்லிலும் இரண்டு வேறுபட்ட ஒலியைப்பெற்று வருதல் கண்கூடு. இத்தகைய வேறுபாட்டை மிகுதியும் தனது நுண்ணிய செவியால் உணர்ந்த கவிஞன் அவற்றை நன்கு பயன்படுத்துகிறான். நாம் வாய்விட்டுப் படிக்காவிட்டால் அதன்கண் அமைந்துள்ள ஒரு பகுதி அழகை அநுபவிக்க இயலாமற் போய்விடும். பாடல் சிறிதாயினும் பெரிதாயினும் எந்த இனத்தைச் சேர்ந்தவையாயினும் இப்பண்புகள் பொதுவானவை ஆகும்.

எனவே பொருளாலும் ஒசையாலும் சிறப்புடைய சொற்களைக்கொண்டே கவிஞன் கவிதையைப் புனைகின்றான் என்பது தெளிவு. கவிஞன் பயன் படுத்தும் சொற்கள் இவற்றோடன்றி மற்றோர் இயல்பையும் பெற்று விளங்கவேண்டும் என்பர். =9|aissolugbaoli grassroorgy Lo &#5 (Suggestive Power of the word) என்பர். ஒவ்வொரு சொல்லும் நம் காதில் விழுந்தவுடன் ஒர் எண்ணக் கோவையை தோற்றுவிக்கிறது. எல்லாச் சொற்களும் இவ்வாறு செய்யும் என்று க்றுவதற்கில்லை. எனினும் சில சொற்களைக் கவிஞன் தக்க இடத்தில் பயன்படுத்தி அவற்றிற்கு ஒரு புதிய மெருகை ஏற்றிவிடுகிறான். இதனால் அச்சொல்லைப் பிறகு எங்குக் கண்டாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/107&oldid=659809" இலிருந்து மீள்விக்கப்பட்டது