பக்கம்:புதிய கோணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 101

ஊடுருவி நோக்கும் வன்மையால் புறத்தில் காணப்படாத அவற்றின் இயல்புகள் பலவற்றையும் அறிய முடிகிறது. தொடர்பற்றனபோல் காணப்படும் இரண்டு பொருள்களைக் கவிஞன் தன் கற்பனையின் துணைகொண்டு தொடர்பு படுத்துகிறான். அவன் கண்ட கற்பனையை நாம் அநுபவிக்க வேண்டு மாயின் நாமும் உணர்வு உலகத்தில் புகுந்து அதனை அநுபவிக்க வேண்டுமே தவிர ஆராய்ச்சியில் இறங்கிப்பயன் இல்லை. உதாரணமாக,

“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி’ (5spot—ffs)

என்று வள்ளுவர் கூறினால், சந்திரன் ஒளியை அளந்து பார்த்து இத்தகைய ஒளி மாதர் முகத்தில் இல்லையே என்று கவல்வது தவறுடைத்தாகும். சொல்லப் போனால், இன்று நாம் எதனை ஒளி என்று குறிக்கிறோமோ அது மனிதர்களுடைய தோலும் சதையும் உடைய முகத்திற் காணப்படுவதன்று. அவ்வாறு இருக்க வள்ளுவர் ஏன் அங்ஙனம் கூறினார்: கூறினதோடு மட்டும் அமையாமல் சந்திரனைக் காட்டிலும் முகத்திற்கு அதிக ஒளி உள்ளதுபோல் அல்லவா கூறுகிறார்? ஆம்! இதுவே கற்பனையிற் பிறந்த கவிதை, காதலன் கற்பனையில் காதலியின் முகம் நிலவிலும் மிக்க ஒளியுடைய தாகவே காணப்படுகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/109&oldid=659811" இலிருந்து மீள்விக்கப்பட்டது