பக்கம்:புதிய கோணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 : புதிய கோணம்

மேலே கூறிய அனைத்து இலக்கணங்களும் மிகுதியும் பொருந்தி அமைந்த கவிதைகளை உடையது திருக்குறள், கவிதைக்குரிய இத்துணைச்

சிறப்புக்களைப் பெற்றுள்ளதாயினும், குறள வெண்பாக்கள் ஏனைய கவிதைகள் போல் அழகு மிகுவதற்குரிய வாய்ப்புக்கள் நிறைந்தவை அல்ல. காரணம் குறட்பாட்டின் தன்மை

அத்தகையது என்பதுதான். உணர்ச்சியைத் தாங்கி வரும் கவிதைக்கு மிகவும் இடைஞ்சலான வடிவம் ஒன்று உண்டு என்றால் அதுதான் வெண்பா வடிவம். கவிஞன் விருப்பம் போல் வளைந்து கொடுக்கும் ஆற்றல் இல்லாமல் மிகுதியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வரும் இயல்புடையது வெண்பா. நான்கடி களும் பதினைந்து சீர்களும் பெற்ற வெண்பாவே கடினமான வடிவுடையது என்றால், ஒன்றே முக்கால் அடியையும் ஏழு சீர்களையும் கொண்டுவரும் குறள் வெண்பாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்தப் பெரிய இடுக்கண்ணையும் மீறிக் குறள் சிறந்த கவிதைகளைத் தன்னகத்தே பெற்றிருப்பின் இது கவிஞனின் சிறப்பைப் பன்மடங்கு நமக்கு எடுத்துக் காட்டுவதாகும். - w

முன்னர்க் கண்ட அழகுகள் கவிதையில் வெளிப்பட வேண்டுமாயின் அவை பொள்ளெனத் தோன்றிய கவிதைகளாகவே இருத்தல் வேண்டும். பாடவேண்டும் என்ற கட்டுப்பாட்டில் பிறக்கும் பாடல்கள் மேற்கண்ட அழகுகளுடன் விளங்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/110&oldid=659813" இலிருந்து மீள்விக்கப்பட்டது