பக்கம்:புதிய கோணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 107

ஆசிரியர் வைத்துள்ளார். அறிந்தும், தெரிந்தும் என்ற சொற்களால் சொல்லி இருப்பின் அது பிறர் கூற அறிந்ததாகவும், தெரிந்த தாகவும் இருக்கலாம் அன்றோ? பிறர் கூறிவிட்ட ஒரு காரணத்திற்காக ஒன்றை நம்பிவிடுதலும் நம்பாது விடுதலும் அத்துணைச் சிறந்தன அல்ல. அவ்வாறு பிறர் மூலம் அறிந்த செயல் அன்று நஞ்சு கலந்த செய்கை, தானே காணும்பொழுது கலக்கப் பெற்றது என்ற கருத்தை அறிவிக்கவே கண்டும்’ என்ற சொல் ஆட்சி செய்யப்பெற்றுள்ளது. அச்சொல்லில் உள்ள உம்மை மிகவும் அதிசயமான இச்செயலுக்கு ஓர் எல்லை வகுப்பதாய் அமைகிறது. மிகப்பெரியவர்களுக்கும், தமக்கு உண்ணத் தருகிற உணவில் பிறர் தம் கண் எதிரேயே நஞ்சைப் பெய்யும் செயலைக் கண்டிருத்தல் செயற்கரிய செயலாகும். சாதாரண இடங்களிலும் ஓசையை நிறைத்தற்காகவும் உம்மை தருகிற இயல்பு குறளாசிரியரிடம் இல்லை. தாம் கருதிய பொருளுக்கு எல்லை வகுக்கும் அவ்வளவு உயர்வு அல்லது தாழ்வு காட்ட வேண்டிய இடத்திலேயே பெரும்பாலும் ‘உம்மை தந்து பேசுவார். அத்தகைய அற்புதமான இடங்களில் ஒன்று கண்டும் என்ற சொல்லில் உள்ள உம்மை.

நஞ்சு என்பது அடுத்து உள்ள சொல். தமிழ் மொழியில் சில வியப்பான சொல்லாட்சிகள் உண்டு. கடுமையான பொருளை மென்மையான மொழி யாலும், மென்மையான பொருளை வன்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/115&oldid=659817" இலிருந்து மீள்விக்கப்பட்டது