பக்கம்:புதிய கோணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 புதிய கோணம்

மொழியாலும் குறிப்பது இவ்வகையைச் சேர்ந்தது. உள்ளே ஒன்றும் இல்லாதவர்களை அற்பர், கயவர் என்று அழுத்தம் தந்து கூறுதலும், சொல்லும் தன்மை வாய்ந்த விடத்தை நஞ்சு என்ற மெல்லோசை உடைய சொல்லால் குறித்தலும், அரிதல், அறிதல் என்பவைகளும் மேற்கண்ட சொல்லாட்சிக்கு உதாரணங்கள். ஆனால் நஞ்சு என்ற சொல்லை ஆசிரியர் வேண்டுமென்றே அதனுடைய ஓசை நயம் கருதிப்பயன்படுத்துகிறார். நஞ்சை இடுபவர்கள் புறத்தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வருகிறது, மெல்லோசையுடைய இச்சொல். சிரித்துக் கொண்டே கழுத்தை அறுத்தல்’ என்ற செய்கையை நினைவூட்டுகிறது, ‘நஞ்சு’ என்ற சொல். அம்மட்டோடு இல்லை; நஞ்சைத் தருபவர்கள் தம் மனம் கல்லாக இருந்தும் அதனை வெளிக் காட்டாமல் நஞ்சுணவைத் தந்தாலும், வாங்கி உண்ணுகிற நாகரிகமுடைய பெரியார்களின் மனநிலையையும் இச்சொல் குறிக்கிறது. தருபவர் எந்த மனநிலையில் தந்தாலும் உண்பவர், அதனை “நஞ்சாயிற்றே; உண்டால் கொன்று விடுமே என நினைப்பார்களாயின் பயன் இல்லையாய்விடும். உண்பதற்கு ஏற்ற இனிமையும், மென்மையும் உடைய பொருளாகவே உண்பவர்கள் அதனை நினைக்கிறார்கள் என்ற கருத்தையும் ‘நஞ்சுண்டு’ என்ற சொல்லில் உள்ள மெல்லோசை

நினைவூட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/116&oldid=659818" இலிருந்து மீள்விக்கப்பட்டது