பக்கம்:புதிய கோணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 109

அடுத்திருப்பது உண்டு’ என்ற சொல். தின்னல், பருகல், நக்கல் முதலிய பல சொற்கள் இருப்பினும் ‘உண்ணல்” என்ற சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது நோக்கற்குரியது. பருகல் முதலிய சொற்கள் நீர் முதலியவற்றையே குறிக்கும். நஞ்சு பருகி என்றால், நீர்ப் பொருளாய் இருத்தலின் பருகிவிட்டார்; திடப் பொருளாயின் எவ்வாறோ?’ என்பது போன்ற ஐயங்கள் தோன்றுமாதலின், அவற்றைப் போக்கி, அன்றாட உணவை எவ்வளவு விருப்புடன் உண்ணு வார்களோ அத்துணை விருப்புடன் நஞ்சு கலந்த பொருளை உண்டனர் என்ற பொருளும் தொனிக்கவே நஞ்சு உண்டு’ என்று ஆசிரியர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து வருகிற சொல்தான் மிக இன்றியமையாதது. அச்சொல்லைத் திருவள்ளுவர் மட்டுமே கூறக்கூடிய தகுதி வாய்ந்தவர். அத்தகைய சிறப்புடைய சொல்தான் அடுத்து நிற்கும் அமைவர் என்ற அழகிய சொல். அமைவர் என்ற இச்சொற்கு, அவ்வாறு நஞ்சு கொடுத்தாரோடு பின்னும் மேவுவர் என்று பொருள்கூறிச் சென்றார், குறளினும் குறுகிய பொருள் எழுதவல்ல பரிமேலழகர். இனி இச் சொல்லின் ஆற்றலைச் சற்றுக் காண்போம். அமைதல், பொருந்தல், சேர்தல், ஒன்றல் என்பவை அநேகமாக இப்பொருள் தரும் சொற்களே. காலுக்கு ஏற்ற செருப்பைப் பெற்றான் ஒருவன் செருப்புச் சரியாக இருக்கிறது என்பானே தவிர, இச் செருப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/117&oldid=659819" இலிருந்து மீள்விக்கப்பட்டது