பக்கம்:புதிய கோணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புதிய கோணம்

“பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் -

பற்றுக பற்று விடற்கு.” t (குறள்-350)

இக்கவிதையில் உள்ள வல்லோசைகளும் ற்று என்ற எழுத்துக்களின் ஒலியும் எவ்வளவு வலுவாகப் பற்றவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன!

“கொக்கொக்க கூம்பும் பருவத்து ; மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து’’ (குறள்-490)

என்ற கவிதையில் கொக்கைப் பாராதவர்களும் அது குத்தும் வேகத்தை அறிய முடிகிறதன்றோ ஒன்றும் அறியாமல் எல்லாம் அறிந்தவனாகத் தன்னை மதிக்கும் முட்டாளுக்கு உபதேசம் செய்யப் போனால், போனவன் முட்டாளாகி விடுவான். உபதேசம் செய்தபிறகும் அறியாமை உடையவன் பழைய அறியாமை உடையவனாகவே இருப்பான். இதனால் பயன் இருவருக்கும் ஒரு வகையான குழப்பந்தான். எஞ்சி நிற்கும் இக் குழப்பத்தை இதோ கவிதையின் திரண்ட ஓசை நமக்கு அறிவிக்கிறது;

“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.” (குறள்-849)

பணம் முதலிய பொருள்களின் இழிவை விளக்க வருகிறார் கவிஞர். மிகவும் தாழ்ந்தவனைக் கூடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/122&oldid=659825" இலிருந்து மீள்விக்கப்பட்டது