பக்கம்:புதிய கோணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புதிய கோணம்

-மூலம் ஒன்றுக் கொன்று கடலனைய வேற்றுமையைப்

பெற வைத்துவிடுகிறார் ஆசிரியர் ;

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் -

பேரறி வாளன் திரு.” (குறள்-215)

‘பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின். ‘ (குறள்-216)

‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.” (குறள்-217)

இவண் கூறிய மூவர் செல்வமும் பிறர்க்குப்பயன்படும் என்றுதான் கூறுகிறார். பேர் அறிவாளன் என்றால் உலகியல் அறிவு படைத்தவன் என்பது பொருள்; நயன் உடையான் என்றால் ஒப்புரவு செய்பவன் என்றும், பெருந்தகையான் என்றால் பெருவள்ளல் என்றும் பொருள் அறிய வேண்டும். உலகியல் அறிவுடையான் செல்வம் ஊருணி நீர் போன்றது. ஊருணி நீர் யாவர்க்கும் பொதுவாயினும் கட்டுக் காவல் மிக்கது என்பதும், எல்லாவற்றிற்கும் பயன்படாது என்பதும், விலங்கினங்கள் அந்நீரை உண்ண முடியாது என்பதும் அறியப்படல் வேண்டும். எனவே உலகியல் அறிவு மிக்கவனது செல்வம் எல்லாருக்கும் பெரிதும் பயன்படாதபடி ஒரு சிலருக்கே ஒரளவு பயன்படும் என்பது பெற்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/126&oldid=659829" இலிருந்து மீள்விக்கப்பட்டது