பக்கம்:புதிய கோணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணம் 5

ஆணவத்தை எத்துணை முறைகள் போக்கி னாலும் அது தலைதூக்கி எழும் என்பதையும், மெய்யுணர்வு என்னும் ஆயுதத்தைப் பயன் படுத்தினால் தான் இறுதியாக அதனை வெல்ல முடியும் என்பதனையும் கந்தபுராண வரலாறு காட்டி நிற்கின்றது. சூரபதுமனுடைய தலை (அகங்காரமே சூரபதுமனாக உருவகிக்கப் பெற்றான்) பன்முறை வெட்டப்பட்டும் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்தது என்றும், இறுதியாக முருகனுடைய ஞானவேலின் மூலமாக அழிந்தது என்றும் கதை கூறுகிறது. அந்த வேலாயுதந்தானும் ஆணவத்தின் வடிவாகிய சூரபதுமனை ஒருசேர அழிக்காமல், மயிலாகவும் கோழியாகவும் ஆகுமாறு செய்தது என்றும் அதேகதை கூறிச்செல்கிறது. எனவே,

அகங்காரத்தை அடக்க வேண்டுமானால் மெய்யுணர்வு என்னும் ஞான வேலினால்தான் முடியும் என்பதும், அந்த ஞானவேலுங்கூட

அகங்காரத்தை அழிக்காமல் மயில் என்ற விந்துத்’

தத்துவமாகவும், கோழி என்ற நாதத் தத்துவமாகவும் மாறச் செய்கின்றது என்பதும் நன்கு விளங்கும்.

இவ்வுலகம் முழுவதுமே நாதம், விந்து என்ற இரண்டு தத்துவங்களின் கூட்டுதான் எனின்ஆணவம் (சூரன்) மறைந்து நாதம் கோழி, விந்து (மயில்) தத்துவங்களாக ஆயிற்று என்றால்-அதன் அடிப்படையை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தான் என்ற அகங்காரம் மறைந்தால் உலகம் என்ற பன்மைதான் அங்குத் தோன்றமுடியும். தன்னலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/13&oldid=659833" இலிருந்து மீள்விக்கப்பட்டது