பக்கம்:புதிய கோணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புதிய கோணம்

நூற்றுக்கணக்கான இடங்களில் கடவுட் பேணுதலையும், கடவுட் போற்றுதலையும் குறிப்பிடு கின்ற சங்கப்பாடல்கள் அனைத்திலும் ஒன்றிலும் தமக்கு இது வேண்டும் என்று கேட்ட குறிப்பே இல்லை.

இதன் எதிராகப் பரிபாடல் என்ற நூலில் தமிழர்களுடைய இறையன்பு (பக்தி) எத்தகையது என்பதையும் அதன் முதிர்ச்சியில் இறைவனிடத்து இவர்கள் என்ன வேண்டினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

காமரு சுற்றமொடு ஒருங்குநின் அடியுறை யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்வாய்மொழிப் புலவ! நின்தாள்-நிழல் தொழதே.

(பரிபாடல்: )

மரபினோய் நின் அடி தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்; கடும்பொடும் கடும்பொடும் பரவுவது'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு! எனவே

(பரிபாடல்: 2)

வாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினையாம்

நயத்தலின் சிறந்த எம் அடியுறை,

பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே

(பரிபாடல்: 9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/132&oldid=659836" இலிருந்து மீள்விக்கப்பட்டது