பக்கம்:புதிய கோணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 127

எனவே தமிழர் கண்ட பக்தி இயக்கம் மிகச் சிறந்த முறையில் வளர்ந்து சங்க காலத்திலேயே ஒரு உச்ச கட்டத்தை அடைந்துவிட்டது என்பதனை அறிய முடிகிறது.

தமிழர் கண்ட இந்தப் பக்தியின் அடிப்படையை நன்கு அறிந்து கொண்ட காரணத்தால் ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய நாயன்மார்கள், தம்முடைய பக்தியின் முதிர்ச்சியில் பிற உயிர்கட்கு அன்பு செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்தனர். இறந்த வணிகனை எழுப்பி இளம் பெண்ணின் துயர் தீர்த்தல், பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு உணவிடுதல், நோயுற்ற மக்களின் நோய் தீர்த்தல் என்ற மூவர் முதலிகளின் செயல்கள் தமிழர் கண்ட பக்தியின் வெளிப்பாடாகும்.

எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலர் இன்னும் விளக்கமாக,

நடமாடக் கோயில் நம்பர்ககொன்று ஈயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

- (திருமந்: 1857) என்றும்,

அன்பு சிவமிரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமா தாரும் அறிகிலார் (திருமந்: 269) என்றும் கூறியுள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/135&oldid=659839" இலிருந்து மீள்விக்கப்பட்டது