பக்கம்:புதிய கோணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 129

எனவே பக்தர்களுக்கு மிக முக்கியமான இலக்கணம் நான்’, ‘எனது என்ற அகங்கார மமகாரங்களில் இருந்து விடுபடுவதாகும்.

இந்த விடுதலை கிடைத்தால் பொன், பொருள், போகம் என்பவற்றில் ஈடுபாடு இல்லாமல் போகும். அந்த நிலையில்தான் இந்தப் பக்தர்கள் பிற உயிர்களுக்குத் தொண்டாற்ற முற்படுகிறார்கள்.

இவர்கள் செய்கின்ற தொண்டுக்கும் நம் போன்றவர்கள் செய்கின்ற தொண்டுக்கும் கடல் போன்ற வேற்றுமை உண்டு. ‘வந்தவர்க்குச் சோறிடுதல்’ என்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் கூட இதனை நன்கு அறிய முடியும்.

நம்மைப் பொறுத்தவர்ை இரவலர், (பிச்சைக் காரர்) நொதுமலர், (முன்பின் தெரியாதவர்கள்) உறவினர், விருந்தினர் என்று தரம் பிரித்துக் காண்கிறோம். அதற்கேற்றபடி நம் உபசரிப்பும் மாறுபடுகின்றது.

இரவலர் முதல் விருந்தினர்வரை அனைவருக்கும் சோறுதான் போடுகிறோம். என்றாலும் இந்த நால் வகைப் பாகுபாட்டை நாம் மறப்பதில்லை, காரணம் நம்முடைய பக்தி பெயரளவில்தான் இருக்கிறது. எனவே நான்’, ‘எனது என்பவை நம்மை விட்டுப் போவதில்லை. 3 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/137&oldid=659841" இலிருந்து மீள்விக்கப்பட்டது