பக்கம்:புதிய கோணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புதிய கோணம்

என்பது அழியும்பொழுது பிறநலம் என்பது வெளிப்படுவது போல அகங்காரம் மறையும்பொழுது, அங்கே உலகம் (நாதமும் விந்துவும் அல்லது கோழியும் மயிலும்) தோன்றக் காண்கிறோம். தான் என்ற ஒன்றைத் தனியே நிறுத்திக் காண்பது அகங்காரமாகும். உலகம் முழுவதிலும் இறைவனைக் காண்பவன், அஃதாவது ஆன்ம வெளிப்பாட்டையே காண்பவன், அகங்காரமற்றவனாகிறான்.

இந்த அடிப்படையை மனத்திற்கொண்டு பார்த்தால், சாதாரண மனிதராகப் பிறந்தோரும் மெள்ள வளர்ச்சி அடைந்து, தெய்வீகத்தன்மையைப் பெறமுடியும் என்பதை நன்கு அறிகிறோம். எனினும், இத்துறையில் முன்னேறுகின்ற ஒருவனுக்கு எதிரியாக நிற்கின்ற தடை, மூன்றாவதான மலமாகிய ஆணவமே என்பது நன்கு விளங்கும். சைவ சமயத்திற்குரிய தனிப்பட்ட கருத்து என்று இதனைக் கொள்ளாமல், பொதுவாக இத்தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் வழங்கி வந்த தத்துவக் கொள்கை என்பதை மனத்திற் கொண்டு கண்ணகியின் வரலாற்றைக் காண்போமாக.

தொடக்கத்திலிருந்தே அப்பெருமாட்டி நற்பண்புகள் அனைத்திற்கும் உறைவிடமாகத் திகழ்கின்றார். வடிவாலும் அக அழகாலும் சிறந்து நிற்கின்ற அவரை, “போதிலார் திருவினாள் புகழுடை வடிவு" உடையாள் என்று மக்கள் போற்றுகின்றார்கள். அவரை, "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/14&oldid=1390127" இலிருந்து மீள்விக்கப்பட்டது