பக்கம்:புதிய கோணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 புதிய கோணம்

தடவிய மாத்திரைபோல் கற்போர் உட்புகுந்து நற்பயனை விளைவிக்கின்றது.

உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுவதனால் இலக்கியம் அதனைக் கற்போர் உள்ளத்திலும் உணர்ச்சிப் பெருக்கை உண்டாக்குகிறது. எனவே, எந்த உணர்ச்சியின் அடிப்படையில் இலக்கியம் தோன்றிற்றோ அந்த உணர்ச்சியைக் கற்போருக்கும் வழங்கும் என்பதில் ஐயமில்லை. மனித மனத்தில் தோன்றும் பல்வேறு உணர்ச்கிளை (வீரம், காதல், அன்பு, சினம் வெளியிடும் இலக்கியங்கள் உலக மொழிகளில் நிரம்ப உண்டு. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வோர் உணர்ச்சியைத் தலையாய்க் கொண்டு இருப்பினும் grGOTuj உணர்ச்சிகளும் அவ் இலக்கியத்தில் சிறுசிறு அளவு பங்குபெறும். பக்தி உணர்ச்சியைப் பெரிதும் வெளியிடுகின்ற இலக்கியங்கள் உலக மொழிகளில் அதிகம் காண்டல் இயலாது. நன்கு வளர்ச்சி அடைந்துள்ள உலக மொழிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பக்தி இலக்கியத்தை நிரம்பப் பெற்றுள்ள மொழிகள் என்று கணக்கிட்டுப்பார்த்தால், முதலாவது தமிழ்’ மொழியும், இரண்டாவது ஹிப்ரூ மொழியும், மூன்றாவது வட மொழியுமாக நிற்கக் காண்போம். எனவே இந்த ஒரு துறையில் உலக மொழிகள் அனைத்தையும் காட்டிலும், முதல் இடத்தைப் பெறுகின்ற பெருமை நம் தமிழ் மொழிக்கு உண்டு. சுருங்கக் கூறினால், சங்க காலத்தில் தொடங்கி, நேற்று வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி பாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/140&oldid=659845" இலிருந்து மீள்விக்கப்பட்டது