பக்கம்:புதிய கோணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 133

வரையில் பல்வேறு சுவைப்பட்ட இலக்கியங்களை வழங்கினாலும் அவற்றுள் பக்திச் சுவையும் மிளிரக் காணலாம். இவற்றையெல்லாம்விட பக்திச் சுவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நிற்கும் இலக்கியங்களும் தமிழ் மொழியில் உண்டு, சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர், பாடிய பாடல்களுடன் பெரியபுராணம் போன்றவை தனிப்பட்ட பக்தி இலக்கியங்களாக விளங்கக் காண்கிறோம். இங்ஙனம் பக்திச் சுவை ஒன்றுக்கு முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நூல்கள் வேறு மொழிகளில் காண்டல் அரிது.

‘பக்தி என்று கூறினவுடன் குருட்டு நம்பிக்கை, அச்சம் என்பவற்றின் அடிப்படையில் தோன்றிய பக்தியை மனத்தில் நினைந்து யாரும் இடர்ப்பட வேண்டா. முழு முதல் பொருளிடத்தில் பக்தி செலுத்தி, “எனக்கு இன்னின்ன இலாபங்கள் வேண்டும்; அல்லது என்னுடைய குறையைப் போக்க வேண்டுமென்று கேட்கின்ற சராசரி மனப்பான்மை என்றுமே இந்த நாட்டில் இல்லை. மிகப் பழையது ஆகிய பரிபாடலில் கூட நம் முன்னோர்களின் பக்தி எந்த அளவுக்கு உயர்ந்து சென்றிருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது. உண்மையான பக்தி என்பது, பக்தி செய்யப்படும் பொருளின் ஒப்புயர் வற்ற தன்மையை அறிந்து, அதனிடம் பக்தி செய்கின்ற தன்னுடைய மிக்க சிறுமையையும் அறிந்து கொண்டு, பக்தி செய்கின்ற தனக்குப் பக்தி செய்வதைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/141&oldid=659846" இலிருந்து மீள்விக்கப்பட்டது