பக்கம்:புதிய கோணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 புதிய கோணம்

இயலாது என்பதையும் உணர்ந்து, தன்னை முழுவதுமாக அப்பரம்பொருளிடத்தில் ஒப்படைப் பதேயாகும். தன்னால் பக்தி பண்ணப்படும் பொருள் மிகமிக உயர்ந்தது என்பதை உள்ளவாறு ஒருவன் அறிவானாயின் அங்கே சென்று அற்பத்தனமான பொன்னையோ, பொருளையோ, அழிகின்ற இன்பங்களையோ விரும்பி நிற்கமாட்டான் அன்றோ? அங்ஙனம் இவற்றை விரும்புகிறான் ஒருவன் எனில், ஒன்று அவனுடைய பக்தி பொய்யானதாக இருக்கும்; அன்றேல் பக்தி பண்ணப்படும் பரம்பொருளின் இயல்பை அறியாதவனாக இருத்தல் வேண்டும். உண்மையான பக்தியையும், பரம் பொருளின் இயல்பையும் அறிந்த பழந்தமிழர்கள் உண்மையான பக்தி செய்பவர்களாய் இருந்தனர். மற்றும் ஒரு பழந்தமிழன் முன்னர்க் கூறியபடி பரம்பொருளின் இயல்பையும் தனது சிறுமையையும் மிக அழகாக அறிந்து பேசுகிறான்:

“பெரியோர் ஏத்தும் பெரும்பேர் இயவுள்

யான் அறியளவையின் ஏத்தி ஆனது நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின், நின் அடி உள்ளி வந்தனென் நின்னோடு, புரையினர் இல்லாப் புலமையோய்:

(திருமுருகாற்றுப்படை)

நின்னடி உள்ளி வந்தனென்; நின் அளந்து அறிதல் மண் உயிர்க்கு அருமை என்ற இரண்டு அடிகளாலும் பரம்பொருளின் பெருமையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/142&oldid=659847" இலிருந்து மீள்விக்கப்பட்டது