பக்கம்:புதிய கோணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 137

பக்திப் பெருக்கையும் காட்டுவனவாக அமைந்து உள்ளன. இதனை அடுத்துத் தோன்றிய மணிமேகலை என்ற நூலில் “மாரனை வெல்லும் வீர நின்னடி தீ நெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி (மணி. 11, 6) என்றெல்லாம் தொடங்கி, “நின்னடி வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது என்ற முறையில் பேசிச் செல்லக் காண்கிறோம். இதில் ஒரு தனிச் சிறப்பு என்னவெனில், உணர்ச்சியைக் குறைத்து அறிவைப் பயன்படுத்தி உண்மை காண வேண்டுமென்று கூறிய புத்ததேவனின் சமயத்தைப் பின்பற்றுகிறவர்கள் கூட அவன்மாட்டு பக்தி செய்யவேண்டும் என்ற முடிவுக்கே வந்ததாகத் தெரிகின்றது.

மணிமேகலையை அடுத்து இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் தமிழ் நாட்டின் இருண்ட காலமாகும். இருட்டுப் போர்வையைக் கிழித்துக் கொண்டு மக்களைத் தட்டி எழுப்பிச் சமய வாழ்வின் மூலம் அவர்கள் வாழ்க்கைக்கே ஒரு குறிக்கோளை ஈந்த பெருமை 6ம் நூற்றாண்டின் முடிவிலும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாட்டில் திகழ்ந்த நாவுக்கரசர், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரையே சாரும். இவர்களில் தொடங்கி மூன்று நூற்றாண்டுகள் வரை இந்நாட்டில் சமயப் புரட்சி பெரிதும் நடைபெற்ற காலமாகும். இதே காலத்தில் தோன்றிய ஆழ்வார்களும் நாயன்மார் களும் ஈடு இணையற்ற பக்திப் பாடல்களைப் பாடி இந்நாட்டில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/145&oldid=659850" இலிருந்து மீள்விக்கப்பட்டது