பக்கம்:புதிய கோணம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கனாவும் காவன்னாவும்

தமிழ் என்று கூறியவுடன் மூக்கைத் தூக்கிக் கொண்டு அதில் என்ன சார் இருக்கிறது? கனாவும் ‘கா'வன்னாவுந்தானே என்று கூறுகின்ற பெரிய மனிதர்கள் இன்றும் உண்டு. இவர்கள் கனா என்று குறிப்பிடுவது கடவுளையும், ‘கா'வன்னா என்று குறிப்பிடுவது காதலையும் ஆம். வேறு வகையாகக் கூறுமிடத்துக் கடவுளும் காதலுமே தமிழ் இலக்கியத்தில் இடம் பெறுகின்றன என்பதையே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். முற்றிலும் உண்மை தான் இவர்கள் கூற்று. .

விருப்பு, வெறுப்பு அற்ற முறையில் ஆய்ந்தால் தமிழ் முழுவதிலும் கடவுளும் காதலுமே பேசப்படுகின்றன. இதைக் கூறுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? இவை - இரண்டையும் தவிர வேறு ஏதேனும் புதிய பொருளை இன்றாயினும் கூறல் முடியுமா? இவ்வுலகம், அதன் தோற்றம், மக்கள் வாழ்வு, அவர்களுடைய நோக்கங்கள், ஏனைய உயிர்கள் ஆகிய அனைத்தும் காதலில் இடம் பெற்று விடுகின்றன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/149&oldid=659854" இலிருந்து மீள்விக்கப்பட்டது