பக்கம்:புதிய கோணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'க'னாவும் ‘கா'வன்னாவும் 143

எழுதப் பெற்ற உண்மைச் சரித்திரத்தைக் கொண்டு ஒரளவு உண்மையை அறியலாம்.

ஆனால், இந்நாளில் சரித்திரம் என்ற பெயரில் வழங்கப்பெறும் இராஜாக்கள் கதையை அறிவதன் மூலம் என்ன பயன் ஏற்படுதல் கூடும்? அரசர்கள் வரலாறுகளை அறிவதன் மூலம் அவர்கள் காலத்து வாழ்ந்த மக்களைப்பற்றி நாம் என்ன அறிதல் கூடும்? ஒன்றும் இல்லை. அவ்வாறாயின் வேறு வழி யாது? அந்த இனத்தாருள் வாழ்ந்த கவிஞர்களே உண்மை வரலாற்றைத்தரத் தகுதியுள்ளவர்கள். அக்கவிஞர்கள் பாடிய கவிதைகளின் மூலமே சாதாரண மக்களின் வரலாற்றை நாம் உள்ளவாறு அறிதல் கூடும். தமிழ் மக்கள் வாழ்வில் எவை நிரம்பி இருந்தன என்பதை அவர்களுடைய வரலாற்றில் தானே அறிய முடியும்? அந்த வரலாறு, அவர்கள் காலத்தே எழுந்த கவிதைகளில் தான் உள்ளது எனில், அந்தக் கவிதைகளில் என்ன பேசப் பெற்று உள்ளனவோ அவையே அவர்கள் வரலாறாகவும் அமைந்திருக்கும் எனக் கூறத் தேவையில்லை.

தமிழ்க் கவிதைகளில் கடவுளும் காதலுமே நிறைந்துள்ளன என்றால் அப்பழந்தமிழர் வாழ்விலும் இவை இரண்டுமே நிறைந்திருந்தன என்று கூறுவதில் தவறில்லை. இவ்வாறு கூறியவுடன் கடவுள், காதல் இரண்டும் மட்டும் நிறைந்த ஒரு வாழ்வை முழு வாழ்வு என்று கூற முடியுமா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/151&oldid=659857" இலிருந்து மீள்விக்கப்பட்டது