பக்கம்:புதிய கோணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 புதிய கோணம்

கூடச் சிலர் ஐயுறலாம். ஆழ்ந்து ஆராய்ந்தால் இந்த ஐயத்திற்கு ஆதாரம் இல்லை என்பது புலனாகும்.

அற்றைத் தமிழர், காதல் என்ற சொல்லை மிகப் பரந்த பொருளில் பயன்படுத்தினர். மனிதனுடைய வாழ்வு முழுவதையும் எடுத்து அலசிப் பார்த்தால் அறிவு, உணர்வு என்ற இரண்டினாலுமே அவ் வாழ்வு நடைபெறுவது தெரியும். உலகில் எப்பகுதியில் எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை எடுத்துக் கொண்டாலும் இஃது உண்மை என்பதை அறியலாம். அந்த அடிப்படையில் கண்டால் தமிழன் காதல் என்று கூறுவது உணர்வு வாழ்க்கையையே ஆகும்; கடவுள் என்று கூறியது அறிவு வாழ்க்கையையே ஆகும்.

உணர்வு, அறிவு என்று இரண்டாகப் பகுத்துக் கூறினாலும் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டே இருந்தன. அவனுடைய காதல் வாழ்வில் கடவுளும், கடவுள் அறிவில் காதலும் கலந்து நின்றன. இங்ஙனம் உணர்வு, அறிவு இரண்டையும் கலப்புச் (Synthesis) செய்து வாழ்ந்ததன்ால் தான் உலகின் ஏனைய இனத்தார் அழிந்துங்கூட இத்தமிழ் இனம் அழியாமல் இருந்து வருகிறது.

இக்காலத்தார் வெறுப்புடன் பேசும் கனாவைத் தமிழர் எவ்வாறு கண்டனர்: சங்க இலக்கியங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/152&oldid=659858" இலிருந்து மீள்விக்கப்பட்டது