பக்கம்:புதிய கோணம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'க'னாவும் ‘கா'வன்னாவும் 145

களாகிய எட்டுத் தொகைகளில் பதிற்றுப்பத்து நீங்கலாக (அதுவும் அகப்படாமையால்) ஏனைய தொகை நூல்களுள் காணப்பெறும் கடவுள் வாழ்த்துக்களும் பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படையும் இவர்கள் கடவுள் பற்றிக் கூறியவற்றிற்கு எடுத்துக்காட்டு. பரிபாடல் முழுவதிலும் (அகப்பட்டவை கொஞ்சமே) முருகனும் திருமாலும் மிகுதியாகப் பேசப்படுகின்றனர். புறநானூற்றில் பல பாடல்களில் கடவுள் கொள்கை பேசப்படுகிறது. உதாரணமாக, ஒன்றைக் காணலாம்.

இறைவனுடைய இலக்கணத்தைக் கூற வந்த பெரியோர்கள் ஒர் இயல்பை மிகவும் அழுத்திக் கூறினர். அவன், விருப்பு வெறுப்பு அற்ற முழுப் பொருள் என்பதே அது. இதனைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் கூறிய பெருமை வள்ளுவரையே சாரும்.

‘'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” (குறள் 4)

என்ற குறளில் இக் கருத்துப் பேசப்படுகின்றதெனில், இவர்கள் பண்பாட்டிற்கு வேறு எடுத்துக்காட்டும் வேண்டுமோ? ஆனால், திருக்குறள் காலத்தில் இக் கருத்துப் புதிதாகத் தோன்றியதோ என்று நினைக்க வேண்டா திருக்குறளுக்கு மிகவும் முற்பட்டதாகிய புறநானூற்றிலும் இதனைக் காண்கிறோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/153&oldid=659859" இலிருந்து மீள்விக்கப்பட்டது