பக்கம்:புதிய கோணம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 புதிய கோணம்

“நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்

புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா ஆங்கு” (புறம்: 106)

என்ற கபிலர் பாடல் ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியது.

கடவுளைப்பற்றிப் பல உண்மைகளைக் கண்ட நம் முன்னோர் அனைவரும் காடுகள் சென்று அதில் சில்) ட வைத்துத் துறவு மேற்கொண்டு

வாழ்ந்தவரல்லர் என்பது அறிதற்குரியது. மெய்ப்பொருளை அடையவும் அறியவும் அவர்கள் கையாண்ட வழி யாது? சொன்னால் ஒரளவு

நம்பக்கூட முடியாது. காதல் மூலமாகவே அவர்கள் கடவுளை அறிந்தனர். இதனால் தான் காதல் என்ற சொல்லுக்கு அவர்கள் கண்ட பொருள் மிகவும் பரந்தது என்பதை அறிகின்றோம்.

அன்பு ஒர் ஆண், பெண் என்ற இருவரிடையே முகிழ்க்கும்பொழுது காதல் என்று அழைக்கப் படுகின்றது. இதே அன்பு தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயும், ஏனைய மனிதர், விலங்கு முதலிய வற்றிடையேயும் முகிழ்க்கும்பொழுது காதல் என்று பெயர் பெறுவதில்லை. பிற்காலத்தில் இச் சொல்லை எல்லா அன்புக்கும் பொதுவாகப் பயன்படுத்தவும் செய்தனர். ஒருவன் ஒருத்தி என்ற இருவரிடையே தோன்றும் இந்த அன்பு எக்காரணத்தால் தோன்றுகிறது? முன்பின் கண்டிராத இருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/154&oldid=659860" இலிருந்து மீள்விக்கப்பட்டது