பக்கம்:புதிய கோணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனாவும் காவன்னாவும் 147

இடையே திடீரென்று தோன்றும் இக்காதல் தெய்வீகமானது எனக் கருதினர் நம்மவர்.

‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறு: 40)

என்ற குறுந்தொகைப் பாடல் இக்கருத்தை நன்கு வலியுறுத்துகின்றது. எனவே, தம்மையும் அறியாமல் தோன்றும் இந்த அன்பு மற்றொரு பெண்மேல் சென்றவிடத்துக் காதல் என்று பெயர் பெற்றது.

அப் பெண்ணை மணந்து இல்வாழ்வு நடத்தத் தொடங்கியதும் அவளிடம் மட்டும் விரிந்த அன்பு மேலும் விரிந்து உற்றார், உறவினர், ஊரார், நொது மலர் எனப் பெருக ஆரம்பித்தது. இவ்வாறு விரிந்து கொண்டே வந்து வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாட்டைக் கடந்தவுடன் அருள் என்ற பெயரைப் பெற்றது. அன்பு தான் அருளாகப் பரிணமிக்கிறது என்பதை அருள் என்னும் அன்பீன் குழவி (குறள் 757) எனக் குறள் விரிக்கின்றது.

அருள் ஒருவனிடம் பரிணமிக்கும் பொழுதுதான் தான் யார்? உலகம் யாது தனக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு யாது? உலகின் முதற்காரணம் யார்? என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை கிடைக்கிறது. இவற்றிற்கு விடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/155&oldid=659861" இலிருந்து மீள்விக்கப்பட்டது