பக்கம்:புதிய கோணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புதிய கோணம்

எளிதான காரியம் அன்று என்பதற்காக அதை விட்டுவிட்டால் நம்முடைய வாழ்க்கை மனித வாழ்க்கையிலிருந்து மாக்கள் வாழ்க்கையாக மாறி விடும். ஆசை என்பதற்கு 6T உண்டு. தன்னுடைய வாழ்வு ஓரளவு வளமுடையதாக இருக்க வேண்டுமென்பதில் எவ்விதமான தவறும் இல்லை. ஆனால் எந்த மனிதனும் அத்தோடு நிறுத்துவதே இல்லை. -

‘ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம்கட்டி

ஆளினும் கடல் மீதில் ஆணைசெலவே நினைவர் அளகேசன் நிகராக

அம்பொன் மிக வைத்தபேரும்’

(தாயுமா: பரிபூர, 10)

என்று சொல்லுகிறார் தாயுமானவர். ஆகவே நம்முடைய ஆசை வளர்ந்துகொண்டே செல்லுமே ஆனால், அது வாழ்க்கையைத் தின்று விடுவதாக அமையும்.

‘உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்’

என்று நாலடியார் சொல்கிறது.

ஆக, ஆசை அதிகமாக அதிகமாகத்தான் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக்கூட பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறான். மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/158&oldid=659864" இலிருந்து மீள்விக்கப்பட்டது