பக்கம்:புதிய கோணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புதிய கோணம்

என்று அறிகிறோம். மன்மதன் கோவிலுக்குச்சென்று வழிபட வேண்டுமென்று கூறிய தோழியை நோக்கி, “பீடு அன்று’ என்று கூறுவதால் இதனை அறிகின்றோம். கணவன் தான் செய்த குற்றங்களை எல்லாம் வரிசைப்படுத்தி எண்ணி, இறுதியில் தான் அனைவருக்கும் இடுக்கண் செய்ததை உணர்ந்து வருந்துகிறான். மதுரையில்தான் கணவனும் மனைவியும் இரண்டாம் முறையாகத் தனித்துப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கோவலன் அவளுடைய மென்மையைப் பாராட்டிவிட்டுத் தன் தவறுகளையும் வரிசைப்படுத்திப் பார்த்து இறுதியில் தான் அழைத்தவுடன் மறுப்பு ஒன்றும் கூறாமல் கண்ணகி மதுரைக்குப் புறப்பட்ட அருமையை நினைந்து,

“எழுக என எழுந்தாய், என் செய்தனை?”

(சிலம்பு : 16, 70)

என்று பேசுகிறான்.

கோவலன் மனம் மாசு நீங்கி ஒளிவிடும் இந்நிலையில் கண்ணகியின் மனம் ஒரளவு அகங்காரத்தில் அமிழத் தொடங்குகிறது. என் செய்தனை? என்ற வினாவிற்கு அப்பெருமாட்டி தந்த விடையை, -

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/16&oldid=659866" இலிருந்து மீள்விக்கப்பட்டது