பக்கம்:புதிய கோணம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர் சிந்தனை 153

ஆசையைப் போக்கிக் கொள்வார்களேயானால் தாங்கள் வாழுகின்ற சமுதாயத்தில் ஒப்பற்றவர்களாக அவர்கள் இருக்க முடியும். தங்களுடைய குடும்பத்தில் ஒப்பற்ற தலைவர்களாக ஆக முடியும்

இப்படி ஆசையற்றவர்கள் நடத்துகின்ற குடும்பங்கள் பல சேர்ந்து வருகின்ற சமுதாயம், மிகச் சிறந்ததாக அமையும். அந்தச் சமுதாயங்கள் பலகோடி அமைகின்ற நாடு ஈடிணையற்றதாக இருக்கும். அங்கேதான் பிற உயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து நடக்கின்ற கடப்பாடு உடையவர்கள் தோன்றுவார்கள்.

அந்த வளர்ச்சி என்று இந்த நாட்டில் வருகின்றதோ, அன்றுதான் இந்த நாடு ஒப்பற்ற நாடாகும்.

தனி மனிதன் ஆசையற்று, அச்சமற்று வாழத் தொடங்கினானேயானால், முழுத்தன்மை பெற்ற மனிதனாக ஆகமுடியும். அத்தகைய மனிதர்கள் நிறைந்த சமுதாயம்-ஒப்பற்றதாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

உலகத்தில் பெரியவர்கள் எல்லாக் காலங்களிலும் தோன்றி தேவையான நீதிகளையும், அறங்களையும் கூறியிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை காலத்திற்கேற்பவற்றைத் தேர்ந்தெடுத்து அதன்படி வாழ்வது மிக முக்கியமானதாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/161&oldid=659868" இலிருந்து மீள்விக்கப்பட்டது