பக்கம்:புதிய கோணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர் சிந்தனை 155

ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் கவனத்தைச் செலுத்துவதனாலே, மக்களுக்குப் பயன்பட வேண்டிய செல்வம் வேறு வகையில் போகின்றது. ஆகவே நாடு முழுவதையும் தழுவியிருக்கின்ற இந்த அச்சத்தின் அடிப்படையைச் சிந்திப்போமேயானால், வள்ளுவன் சொல்கிறான்,

‘அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது’’ (குறள்: 10.75)

என்று. பண்பில்லாதவர்களிடத்தில்தான் அச்சம் இருக்க வேண்டும். பண்புடையவர்களிடத்தில் அச்சம் இருப்பதற்குக் காரணம் இல்லை. வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்த்து பேசுகிறான் பாரதி. சிந்தித்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகின்றான். ‘முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை முதல் இறுதி இடை நமது வசத்திலில்லை’

இது தெரிந்த பிற்பாடு அச்சம் அடைவதற்கு என்ன இருக்கிறது? வருவது வந்தே தீரும். அதை யாரும் நிறுத்தப் போவதில்லை. நியூட்டனுடைய மூன்றாவது சட்டத்தைப் போல எந்தச்செயலும் எதிர்ச்செயலைப் பெற்றே தீரும் என்றால் யாரும் வருவதை நிறுத்த முடியாது. அது தெரிந்த பிற்பாடு அதனை ஏற்றுக் கொள்வதற்கு, வரவேற்பதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, அஞ்சுவதனாலே பயன் ஒன்றுமில்லை. அஞ்சுவதனாலே என்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/163&oldid=659870" இலிருந்து மீள்விக்கப்பட்டது