பக்கம்:புதிய கோணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர் சிந்தனை 157

முக்கியமான ஒன்று. எந்த ஒன்று பற்றியும் அஞ்சாமல் இருப்பது, நம்முடைய பண்பாட்டை, ஆண்மையை, உறுதிப்பாட்டை, நெஞ்சு அழுத்தத்தை வளர்த்துக் கொள்ள வழி செய்வதாகும். அச்சமே போய்விடு’ என்று சொன்னால் அச்சம் போய்விடப் போவதில்லை. அச்சம் போகவேண்டுமானால் அதற்கு ஒரே வழி இறைவழிபாடு தான். நம்மைவிட உயர்ந்த ஒரு பொருளிடத்தில் -நம்மைப் படைத்து, காத்து, அளித்து, அழிக்கின்ற பொருளிடத்தில் கொண்டிருக்கின்ற உறுதிப்பாட்டின், நம்பிக்கையின் அடிப்படையில்தான் அச்சத்தைப் போக்க முடியும்.

குழந்தை தனியே நடப்பதற்கு அஞ்சுகிறது. ஆனால் தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டவுடன் அதனுடைய அச்சம் போய்விடு கிறது. தாய் தன்னைக் காப்பாற்றுவாள் என்ற உறுதிப்பாடு இருக்கின்ற காரணத்தினாலே குழந்தை யின் அச்சம் போய்விடுகிறது.

அதுபோல நம்முடைய அச்சம் போகவேண்டு மானால், நாளை என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

“முன்னர் நமது இச்சையினால் பிறந்தோமில்லை

முதல் இடை இறுதி நம் வசத்தி லில்லை’

(பாரதி கவிதைகள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/165&oldid=659872" இலிருந்து மீள்விக்கப்பட்டது