பக்கம்:புதிய கோணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கவிஞன் கண்ட விஞ்ஞானம்

“மண்திணிந்த நிலனும்

நிலன்ஏந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்(கு) ஐம்பெரும் பூதத்(து) இயற்கை” (புறம், 2)

மிகப் பழையதாகிய இப் புறநானூற்றுப் பாடல் ஐந்து பெரும் பூதங்களை எண்ணி வகைப்படுத்திக் கூறுவதோடு மட்டுமல்லாமல், அவற்றை வகைப் படுத்தும் முறையிலேயே பூதங்களின் இயல்புகளையும் ஓரளவு தெரிவித்துச் செல்கிறது. முதலாவது பேசப்படுகின்ற பூதம் மண் ஆகும். இம்மண் உலகைப்பற்றிச் சொல்ல வந்த புலவர் மண்திணிந்த நிலனும் என்று இலக்கணம் வகுக்கின்றார். ‘திணிந்த என்கின்ற அந்த அழகிய சொல்லைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். செறிவு, செறிதல் என்ற பொருளுடையது திணிந்த என்ற சொல். மூட்டைக்குள் பொருளை வைத்துத் திணிக்காதே’ என்று இன்றும் பேச்சு வழக்கில் இச்சொல் பயன்படுவதைக் காண்கிறோம். மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/167&oldid=659874" இலிருந்து மீள்விக்கப்பட்டது