பக்கம்:புதிய கோணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புதிய கோணம்

நெருக்கமாகப் பொருள்கள் அமைய வேண்டிய முறையில் அமுக்கிப் பிடித்துத் திணிப்பது தான் இந்தத் திணிவு என்ற சொல்லின் பொருளாகும். ஆகவே, புலவர் திணிந்த நிலன்’ என்று சொல்லும்போது ‘dense” என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை நம்முடைய மனத்தில் பதியுமாறு செய்கிறார். ஐந்து பூதங்களை வரிசைப் படுத்திப் பார்ப்போமானால் இம்மண் உலகுக்குள்ள செறிவு அதாவது density வேறு எந்தப் பூதத்திற்கும் இல்லையென்பதை விஞ்ஞானம் அறிந்தோர் எளிதில் அறிந்துகொள்ள முடியும். அறிவு வளர்ந்த இற்றை நாளில் இது புதுமை அல்லாததாக இருக்கலாம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்க்மிடிஸ் முதலானோர் தோன்றுவதற்கு முன்னரே ஒரு புலவர் கூற்றாக வெளிப்படுமே ஆனால் கொஞ்சம் வியப்பதற்கு உரியதுதான்.

இதைவிடச் சிறப்பு என்னவெனில், உலகின் பிற பகுதிகளில் உள்ளார் அனைவரும் இவ்வுலகம் தட்டையானது என்றும், அசையாது ஒரிடத்தில் இருப்பது என்றும் கொண்டிருந்த கருத்தை கலீலியோவும், கோப்பர்நீகயஸ்-சம் மாற்றி அமைத்தார்கள். ஆனால், இவ்விருவரும் தோன்றுவதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணுக்குச் செறிவுண்டு என்று பாடிய அதே புலவன், இவ்வுலகத்தின் பெளதிகச் சூழ்நிலையையும் நன்கு ஆராய்ந்து, ஆகாயம் என்னும் பெருவெளியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/168&oldid=659875" இலிருந்து மீள்விக்கப்பட்டது