பக்கம்:புதிய கோணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 புதிய கோணம்

உலகை நம்மைப் போலவே அவனும் பார்த்துவிட்டுக் கவிதை எழுதினால் நாம் முன்னரே கண்டுள்ள பொருள்களையும் காட்சிகளையும்தாமே அங்கும் காண முடியும்? அப்படியானால் அவன் கவிதை நாம் பள்ளிக் கூடத்தில் படிக்கும் சரித்திரம், நில நூல், சமுதாய நூல் போன்றே இருக்கும். ஒரே ஒரு வேறுபாடு என்ன வெனில் இது பாட்டுக்களாக இருக்கும். இவ்வாறு இருந்தால் யார் கவிதையை விரும்பிக் கற்பார்கள்? சரித்திரம் முதலிய நூல்கள் ஒரு பத்தாண்டுகள் ஆனதும் பயனற்றுப் போவது

போல இக்கவிதையும் காலம் மாறினவுடன் அழிந்துவிடும். இவ்வாறு அழிவதை நாம் கவிதை என்று குறிப்பதில்லை. அவ்வாறாயின் கவிதை

அழியாமல் இருக்க வேண்டும் என்று ஆகிறதல்லவா? அழியாத கவிதை எழுத வேண்டுமாயின் கவிஞன் கனவு கண்டால்தான் முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ கவிஞர்கள் அழியாக் கவிதை எழுதியுள்ளார்கள்; ஆம் கனவு கண்டுதான். அவருள் ஒருவர் திருத்தக்கதேவர். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இக் கவிஞர்பிரான் என்றும் வாழும் சாவாக் கவிதை எழுதியுள்ளார். அந்நூலின் பெயர் சிந்தாமணி என்பதாகும். கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கும் வழிகாட்டியாக இருந்த பெருமையுடையவர் திருத்தக்கதேவர். அவர் காலம்வரை பெருங்காப்பியங்கள் ஆசிரியப் பாவாலேயே ஆக்கப் பெற்றிருந்தன. ஆனால், கனவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/172&oldid=659880" இலிருந்து மீள்விக்கப்பட்டது