பக்கம்:புதிய கோணம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 புதிய கோணம்

என்ற குறளை மனத்தில் வாங்கிக் கொண்ட தேவர் தாம் கூறும் நாட்டில் எது மிக இன்றியமையாதது என ஆய்ந்து, அறிவு முக்கியம் என்பதைக் கண்டு கூறுகிறார். அறிவை அடுத்து வேண்டப்படுவது செல்வம். எத்துணை அறிவையும் வறுமை கொன்று விடுமாகலின் அறிவு நல்ல முறையில் தொழிற்பட வேண்டுமாயின் செல்வமும் அறிவுடன் இருக்க வேண்டும் என்று கண்டார். இவை இரண்டும் இருந்தால்கூட ஒரு மனிதன் முழுத் தன்மையை அடைந்துவிட்டான் என்று கூறல் இயலாது. அவ்வறிவின் உதவியால் செல்வத்தை அனுபவிக்கத் தெரியவேண்டும். அவ்வாறு செய்வதே ஒரு கலை. கலை என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதி. கலையில் ஈடுபட ஒருவன் பழகிக் கொண்ட பொழுதுதான் முழுத் தன்மையடைகிறான். வெறும் அறிவுச் செல்வம் மட்டும் உடையவன் முழு வாழ்க்கையைப் பெற முடியாது. இம் மூன்றும் கலந்த வாழ்க்கையே முழு வாழ்க்கை ஏமாங்கத நாட்டு மக்களும் மன்னனும் இம் மூன்றும் பெற்றிருந்தனர் எனத் தேவர் குறிக்கிறார்.

‘நாவீற்று இருந்த புலமாமக ளோடுநன்பொன் பூவீற்று இருந்த திருமாமகள் புல்ல நாளும் பாவீற்று இருந்த கலைபாரறச் சென்ற கேள்விக் கோவீற்று இருந்த குடிநாட்டணி கூறல் உற்றேன்’

(சிந்தா 30)

என்று அவர் கூறும்பொழுது சாதாரணமாக நாம் அன்றாடம் காணும் நாட்டை அவர் கூறவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/174&oldid=659882" இலிருந்து மீள்விக்கப்பட்டது