பக்கம்:புதிய கோணம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட கனவு 167

என்றும், ஒரு கனவு நாட்டைக் கூறத் தொடங்குகிறார் என்றும் அறிய முடிகிறது. இனி, இந் நாட்டின் இயற்கை வளம் கூறத் தொடங்கிய ஆசிரியர், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானில வளமும் செறிந்துள்ளமையை ஒரே பாடலில் அழகாகக் குறிக்கிறார்.

உயர்ந்த தென்னையில் பழுத்த தென்னை நெற்று உதிர்கிறது; ஆனால், அதனையடுத்து மிக்க உயரமாக வளர்ந்துள்ள கமுக மரத்தின்மேல் விழுகிறது. அடுத்து இருக்கும் தேன் பொந்தில் பட்டு, பலா மரத்தில் பழுத்து நிற்கும் ஒரு பழத்தினைச் சாடி, இன்னும் கீழே இருக்கும் மாமரத்தில் உள்ள கனிகளை உதிர்த்துவிட்டு, இறுதியாகத் தரையில் விழுமுன்னர் வாழை மரத்தில் உள்ள வாழைக் குலைகளையும் சிந்திவிட்டுத் தரையில் விழுகிறதாம். இக் காட்சியில் யாருக்காவது சந்தேகம் ஏற்படுமேயானால் பக்கத்திலேயே இருக்கும் இலங்கைத் தீவுக்கு ஒரு முறை சென்று வந்தால் இக் கவிதை எவ்வளவு மெய்யானது என்பது விளங்கும்.

இன்னும் ஏமாங்கத நாட்டில் நீர் வளம் பற்றிப் பேசுகிறார் ஆசிரியர், “மேகங்கள் கடலில் மேய்ந்து சிவபெருமான் சடைபோல் மின்னி, வெள்ளித் தாரைகள் போல் மழை பொழி’கின்றதாம். இதனாலாய நீர்ப்பெருக்கம் மலையிடத்துண்டான செல்வங்களை எல்லாம் அடித்துக் கொண்டு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/175&oldid=659883" இலிருந்து மீள்விக்கப்பட்டது