பக்கம்:புதிய கோணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 புதிய கோணம்

“வள்ளல்கள் போல் பள்ளத்தாக்கில் உள்ளவர்கட்குத் தருகிறதாம். உணவு வளம் பேச வந்த ஆசிரியர்

செந்நெல் குப்பைகள் கோடுயர் செம்பொன்னின் குன்றம் ஒத்தவே’ - (சிந்தா 59)

என்று கூறிவிட்டு வாணிகநிலையைப் பற்றியும் பேசுகிறார். - -

வியாபாரம் மிகுதியும் நடைபெற்று வந்ததாம் ஏமாங்கத நாட்டில். நெல், கரும்பு, இளநீர், பாக்கு, வெற்றிலை, கடல் வளமாகிய உப்பு, மீன் முதலிய வற்றையும் ஏற்றிக் கொண்ட வண்டிகள் “திருந்தி எத் திசைகளும் செறிந்த’ என்று கூறுகிறார் ஆகலின் கனத்த வாணிகமும் அந்நாட்டில் நடைபெற்றமை அறிகிறோம். இங்குக் கூறிய அனைத்துப் பொருள்கள் செல்வது ஒரு வியப்பன்று. ஆனால், “மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டி'யையும் ஆசிரியர் கூறுகிறார். மனம் மாறாத மலர்களை வண்டியில் ஏற்றிச் சென்றார்கள் என்கிறபொழுது அந்நாட்டு மக்களின் ‘முருகியல் சுவை எவ்வாறு இருந்திருக்கும் என்று நினையவேண்டி உளது. .

இவ்வளவு அருமையான நாட்டைப் படைத்த ஆசிரியர் அந்நாட்டு மக்களையும் படைக்கிறார். சோம்பி இருப்பவன் மனம் சாத்தான் குடி இருக்கும் வீடு’ என்பது மேனாட்டார் கூறும் பழமொழி. தீர்க்கதரிசியாகிய கவிஞன் தான் படைத்த நாட்டு மக்கள் பெரிய உழைப்பாளிகள் என்று கூறுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/176&oldid=659884" இலிருந்து மீள்விக்கப்பட்டது