பக்கம்:புதிய கோணம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட கனவு 173

யாவருக்கும் பொதுவானவன்; ஆனால், மனிதன் என்ற நிலையில் அவனுக்கு விருப்பு வெறுப்புகள் அனைத்தும் உண்டு, இவ்விரண்டு நிலைகளும் வேறு வேறானவை எனினும் ஒரே மனிதனிடம் இருக்கின்றனவாகலின் அரசன் ஒரு நிலையில் நின்று கடமையை ஆற்றும் பொழுது மற்றொருநிலை அவனை வந்து பாதித்தல் கூடாது. இக்கருத்தையும் தேவர் அழகாகக் குறிப்பிடுகிறார். ‘ஈகையால் வருணன்’ என்ற தொடரால் அரசனின் நடுவு நிலைமை குறிக்கப் பெறுகிறது. மழை எவ்வாறு தகுதி பாராது, வேண்டியவர் வேண்டாதவர் என்றுங் கவலை கொள்ளாமல் பொழிகிறதோ அவ்வாறு இவன் Fcm}g அனைவருக்கும் பயன்பட்டது என்பதைக் குறித்தார். -

“தருமன் தண்ணளி யால்; தனது ஈகையால் வருணன் கூற்றுஉயிர் மாற்றலின் வாமனே அருமை யால்; அழகில் கணை ஐந்துடைத் r திரும கன்; திரு மாநில மன்னனே’ (சிந்தா 180)

ஆதலின் இத்தகைய மன்னனுக்கு நிறைந்த புகழ் இருக்கும் என்பதில் ஐயம் என்ன? எனவே ஆசிரியர் “வானந்தோய் புகழான் என்று குறிக்கிறார்.

அரசன் என்ற மனிதனுடைய வாழ்க்கை அதிகப் பங்கு கொள்ளுமாயின் அவன் கடமையை நன்கு நிறைவேற்றல் இயலாது. இல்வாழ்க்கை யாவர்க்கும் உரியதொன்றாகும். ஆனால், அரசனுக்குரிய கடமை களைச் செய்யக்கூட நேரமில்லாமல் அந்தப்புரத்தில் இருக்க வேண்டும் என்று ஓர் அரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/181&oldid=659890" இலிருந்து மீள்விக்கப்பட்டது