பக்கம்:புதிய கோணம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 புதிய கோணம்

கருதுவானாயின் அவன் வாழ்க்கையும் கெட்டு அரசப் பதவியையும் இழக்க நேரிடும்.

இங்ஙனம் இன்பம் ஒன்றையே பெரிதாகக் கருதிக் கடமையை மறந்த மன்னர்களை அரசாட்சியும் மெல்ல விட்டு நீங்கிவிடும் என்று தேவர் அழகாகக் குறிக்கிறார். யானை உண்ட விளங்கனி’ என்பது பழமொழி. பழம் உருவத்தால் அப்படியே இருக்க உள்ளே ஒன்றும் இல்லாது போதலே யானை உண்ட விளங்கனி என்று கூறப்பெறும். இத்தகைய கடமையை மறந்த மன்னர்களும் புறத்தோற்றத்தில் மன்னர்கள் போலவே இருக்க உள்ளே அவர்களுடைய செல்வம் முற்றும் நீங்கிவிடும். இதனை யானை உண்ட விளங்கனிபோல’ என்று தேவர் கூறுகிறார்.

தேவர் கனவு இவற்றோடு நிற்கவில்லை. மனிதன் இயந்திரத்தின் உதவியால் விண்ணில் பறக்கலாம் என்று கூறியவரும், ஏறத்தாழத் தற்கால விமானம் போன்ற அமைப்பையுடைய ஓர் இயந்திரத்தைக் கவிதையில் காட்டியவரும் திருத்தக்கதேவரேயாவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/182&oldid=659891" இலிருந்து மீள்விக்கப்பட்டது