பக்கம்:புதிய கோணம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்? 177

விரிவாகக் கூற வேண்டும்? என்ற வினா நியாய மானதேயாகும். உலகின் வேறு எந்த மொழியிலும் காணப்படாத ஒரு புதுமையாகும் இது! பிறந்தகத்துப் பெருமையை உடன் பிறந்தவளிடமே கூறுவது ஓரளவு நானந் தருவதாகுமன்றோ? அப்படி இருந்தும் திருஞானசம்பந்தர், குமரகுருபரர் என்ற இரண்டு பெருமக்களும் தமிழின் சிறப்பை வலியுறுத்திப் பாடுவதைக் காண்கிறோம். திருஞானசம்பந்தர் 7ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர்; குமரகுருபரர் 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர்கள் இருவரையுந் தவிர 20ஆம் நூற்றாண்டில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த பாரதி, பாரதிதாசன் இருவரும் தமிழின் சிறப்பை அழுத்தந் தந்து பாடிச் சென்றனர். தமிழ் இலக்கியப் பரப்பில் இந்த நால்வரும் தமிழின் சிறப்பைத் தனி இடந் தந்து பாடுவதில் தலை சிறந்தவர்கள் ஆவார்கள். அப்படி ஆனால் இவர்களிடைக் காணப்பெறும் பொதுத் தன்மை யாது. இவர்கள் நால்வரும் வாழ்ந்த காலங்களில் தமிழினம் அந்நியர் ஆட்சியில் சிக்கி இருந்தது; அந்த ஆட்சியாளர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் எவ்வித நாட்டமும் கொள்ளவில்லை.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களைத் தட்டி எழுப்ப இந்த நால்வரும் தமிழின் சிறப்பைக் குறிப்பிட்டுப் பாடும் முறையை ஒரு கருவியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/185&oldid=659894" இலிருந்து மீள்விக்கப்பட்டது